என்ன தவறு செய்தேனோ

நீ துயில் கொள்ள...
நான் தூக்கத்தை மறந்து
தென்றலாய் மாறினேன்...
வேறென்ன தவறு செய்தேன்!

நீ சுவாசிக்க
என் காற்றை தந்தேன்..
வேறென்ன தவறு செய்தேன்!

என் தோகையை விரித்து
நிழலாய் நின்றேன்
நீ இளைப்பாற.....
வேறென்ன தவறு செய்தேன்!

முள்ளும், கல்லும் குத்திவிடாமல்
இலைகளும், பூக்களையும் விரித்தேன்
வேறென்ன தவறு செய்தேன்!

வழிபோக்கனாய் வந்தவர்க்கு
வாழ்விடமாய் இருந்தேன்
வேறென்ன தவறு செய்தேன்!

பிறகு!
ஏன் இந்த மரண தண்டனை
சாட்சியங்கள் இல்லாமல்.....

மரம் வளர்ப்போம் குரல் மட்டும்
மடியும் வேளையில்......

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (18-Sep-14, 11:20 am)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
பார்வை : 144

மேலே