காடுகளடா எங்கள் வீடு

பெருங் காட்டில்
வாழ்க்கை
பெருமையோடு
இனம் பெருக்கி
வந்தோம்...!!!!

எந்தச் சிந்தனையும்
இன்றி இரைதேடி
துள்ளிக் குதித்து
விளையாடி சுதந்திரமாக
உறவாடி மகிழ்ந்தோம்...!!!!

சிறுத்தைக்கு அஞ்சி
இரவில் பதுங்கி
பகல் பொழுதில்
துணிந்து வாழ்ந்து
வந்தோம்....!!!!

சல சல என ஓடும்
நீரைப் பருகி சிறு
மலர்களைச் சுமக்கும்
படர் தழைகளை உண்டு
புல்லின் மேல் புரண்டு
உருண்டு மர நிழலில்
அமர்ந்து காட்டிலே உலா
வந்தோம்....!!!

அன்று இருந்த இன்பம்
இன்று இல்லை! தான்
மட்டும் வாழ்ந்தால்
போதும் என்ற எண்ணம்
கொண்ட மனிதனால்
வந்த வினை...!!!

காட்டை அழித்து நாட்டை
வளர்த்தான் கூட்டைக்
கட்டி எங்களை அடைத்தான்
ஓடி விளையாட உறவு
இல்லை தனி அறையில்
துள்ளிக் குதிக்கவும்
வழியில்லை....!!!!

உரசும் போது குத்தும்
முள்கம்பி பழைய கனியும்
காய்ந்த காயும் அழுகிய
இறைச்சியும் தூக்கிப்
போடுகின்றான் கையில்
தடியுடன் காவல் காக்கிறான்...!!!

காலப் போக்கில்
எங்கள் இனமே
இல்லை இனி
என்று உறுதியானது
இன்று...!!!!!

காட்டு வாழ் எங்கள்
இனத்தின் கண்ணீர்
கதையை யார் கூறுவாரோ
அன்று...!!

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (18-Sep-14, 1:15 pm)
பார்வை : 124

மேலே