ஏமாற்றம்

கருமேகம் வானில்
தினம்கூடும் போதில்
களிப்பேறும் மனதில்

எதிர்பார்த்த மழையைத்
திசைதிருப்பும் காற்றால்
சிறுதூறல் போடும்

கறையானும் நகைக்க
கரைந்தோடும் மேகம்
கனவாகப் போகும்

எழுதியவர் : மலர் (18-Sep-14, 12:24 pm)
Tanglish : yematram
பார்வை : 171

மேலே