உயிரில் நுழைந்த உணர்வுகள் - இராஜ்குமார்

உயிரில் நுழைந்த உணர்வுகள்
=============================

உறக்கம் கேக்கும் கனவுகள்
இரக்கமின்றியே என்னில் இறக்கின்றன
உடுக்க வேண்டிய உடைகள்
நடுக்கத்துடனே என்னில் கசங்குகின்றன

சிதைக்க முயன்ற தவறுகள்
தயக்கமின்றியே என்னில் ஊறுகின்றன
உனைபிடிக்க சொல்லும் பிம்பம்கள்
பிழையின்றியே என்னில் பிறக்கின்றன

அழிக்க நினைக்கும் நிழல்கள்
விழியின்றியே என்னில் விழுகின்றன
நடிக்க நகரும் நளினங்கள்
ரசனையின்றியே என்னில் முளைக்கின்றன

முடிவில் முனையும் தேடல்கள்
நொடிகளின்றியே என்னில் அழுகின்றன
உயிரில் நுழைந்த உணர்வுகள்
காதலின்றியே என்னில் கதறுகின்றன

- இராஜ்குமார்

நாள் : 23 - 6 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (19-Sep-14, 11:59 am)
பார்வை : 129

மேலே