காத்திருப்பு

அதே அதே
அந்த இதழோர
அழகான சிரிப்பிலே
ஆழமாய் என்னை
உன்னில் தொலைத்து விட்டேன் !!

இதை
கண்டதும் காதல் என்பேனா ?
இல்லை
என்னை உன்னில் தொலைத்தால்
காதல் என்பேனா ?

விடையறியா
கேள்விகள் என்னுள் பல
விடையறிந்தவன் நீ
விரைவில் விடை தருவாய் எனும்
நம்பிக்கையில் காத்து இருக்கிறேன்....

எழுதியவர் : யாதிதா (19-Sep-14, 2:29 pm)
Tanglish : kaathiruppu
பார்வை : 88

மேலே