ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்

ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்.(தெம்மாங்கு)

பெண்:--
சரிகைக் கரை வேட்டி கட்டி
சிலுக்குச்சட்ட மின்னும் மச்சான்.
அம்சமாக எம் ஜி யார
அச்சாகக் காட்ட வச்சான்.
கண்ணு படும் சாமி-- காலடி
மண்ணு எடு பூமி.

ஆண்:-
ரெட்டப் பின்னல் பாசி மாலை
வட்டக் கொண்டக் காரி புள்ள
சிக்குனுதான் சிங்காரமா
நச்ச்சுன்னுதான் தேவிபோல
அசத்துறைய குட்டி—நீ
ஒசத்தி வெல்லக் கட்டி.

பெண்:-
என்னப் போல யாரு உண்டு
இவ்வுலகில் கூறு ஒன்று.
சும்மா கிடக்கும் காடு என்று
அம்மான் நீயும் ஆசை கொண்டு.
நம்பி வந்தால் மோசம்—நானும்
நம்பிவிட்டால் மாசம்.

ஆண்:-
என்னவிட யாரு புள்ள.
உன்னத்தொட ஆளே இல்ல.
சிந்து கங்கை காவேரியே
சங்கமித்த சிங்காரியே!
கை எடுத்தேன் வணங்க.—இது
பொய் இல்லையே அணங்கே!

பெண்:-
உனக்கு நானே முந்தி தந்து
எனக்கு நீயே தொந்தி தந்து
கணக்கு ரெண்டு ஆணும் பெண்ணும்
மணக்க என்றும் வாழ வேணும்.
நமக்கு நல்ல காலம்---அன்று
நடத்து உந்தன் யோகம்.

ஆண்:-
நதியெல்லாம் பெருகி வரும்
நிலம்பஞ்சம் அருகி விடும்.
ஆறெல்லாம் கைகோர்க்கும்.
ஊரோடும் நமை வாழ்த்தும்.
இருவர் அன்று இணைவோ.ம்—நாம்
திருமணமும் செய்வோம்.

பெண்:-
நாடு வளம் ஆகுமுன்னா.
வீடு நலம் வாழுமுன்னா.
ஆளுக்கொரு மரம் நடுவோம்.
வாழ்வுக்கது வரம் கொடுக்கும்.
புள்ள குட்டி போல—காடும்
எல்லாம் கட்டிக் காப்போம்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா (19-Sep-14, 3:58 pm)
பார்வை : 347

மேலே