நீ இல்லாமல் இல்லை நான்
என் கண்களில் தூக்கம் இல்லை
உன்னை நான் காணாததால்
என் இதழ்களில் இன்று புன்னகை இல்லை
உன்னோடு நான் பேசாததால்
என் நெஞ்சில் நிம்மதி துளியும் இல்லை
உன்னோடு நான் சேராததால்
என் வார்த்தையில் வலிமை இல்லை
உன் வருகை தாமதமானதால்
இல்லை; இல்லை; இல்லை;
நீ இல்லாமல் என்னில் எதுவுமே இல்லை