கவிதை பிறக்கும்
ஏடு எடுத்து எழிதிடு
பாட்டு எடுத்து பாடிடு
சிந்தனைக் களஞ்சியம் தொட்டிடு
வார்த்தை எடுத்து அடுக்கிடு
கற்பனை வானில் பறந்திடு
அணிகள் அணிந்துக் காட்டிடு
தொடர்ந்து நின்று தொக்கிடு
படர்ந்து நின்று படர்ந்திடு
சுடர் என்று சுட்டிடு
கறடு முறடு தவிர்த்திடு
ஜால வித்தைக் காட்டிடு
பந்தல் ஒன்று போட்டிடு
திங்கள் போல காய்ந்திடு
வண்டு போல உறிஞ்சிடு
மேவி எங்கும் நோக்கிடு
நோக்கும் வண்ணம் எழுதிடு
கற்கும் விதம் அறிந்திடு
சொல்லும் திறன் வளர்த்திடு
கட்டுக் கோப்பு விட்டிடு
பண்ணும் செயல் போற்றிடு
வேகம் வேகம் ஓடிடு
புதிய ஏடு படைத்திடு