உன்னால்

உன்னை பார்த்துதான்
கண்கள் திறக்கிறேன் .......
உன்னை சேர்த்துதான்
கனவுகள் காண்கிறேன் ........
உன்னை நினைத்துதான்
வாழ்க்கை வாழ்கிறேன் .........
உன்னை யாசித்துதான்
உயிர் விடுகிறேன் ...........
உன்னை எண்ணித்தான்
உணர்வினை உணர்கிறேன் .........
உன்னை கண்டுதாத்ன்
காட்சிகள் காண்கிறேன் .........
உன்னை சுற்றித்தான்
பட்டாம்பூச்சி பாக்கிறேன் .....
உன்னை பிடித்துதான்
நெடுத்துரம் நடக்கிறேன் .......
உன்னை தொலைத்ததுதான்
என்னை தேடுகிறேன் .....
காதலில் விழுந்து கிடக்கும்
கைதி போல .......