நவராத்திரி

நவ என்ற பதத்துக்கு ஒன்பது ,புதியது என்று பொருள் உண்டு .

நம் முன்னோர்கள் வான நூலில் காலத்தை உத்தராயணம் (தை முதல் ஆணி வரை ) என்றும் தட்சிணாயணம் (ஆடி முதல் மார்கழி வரை ) என்றும் பிரித்தனர் .உத்தராயணத்தின் நடுவில் வருவது வசந்த ருது மற்றும் தட்சினாயணத்தின் நடுவில் வருவது சரத் ருது என்றும் பெயரிட்டனர் .இவ்விரு பருவகாலங்களும் எமதர்மனின் இரு கோரைப் பற்களை குறிக்கிறது என்று தேவி பாகவதம் சொல்கிறது .

பொதுவாக இக்காலங்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை .அவற்றிலிருந்து ராமநவமியை ஒட்டி வசந்த நவரத்த்ரியை ஒன்பது நாட்களும் , சாரதா நவரத்த்ரி எனப்படும் சரஸ்வதி பூஜையை ஒன்பது நாட்களும் நாம் கொண்டாடுகிறோம் .இக்காலத்தில் எமனிடம் இருந்து தாயுள்ளத்தோடு அம்பிகை நமை காப்பதால் அவளை வழிபாடு செய்யும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினர் .

மேற்கு வங்கத்தில் எதையே காலி பூஜை, துர்கா பூஜை என்கின்றனர் . மைசூருவில் தசரா என்ற பெயரில் விழா எடுக்கின்றனர் . முப்பெரும் சக்திகளான மலைமகள், அலைமகள் , கலைமகள் ஆகியோருக்கு தலா மூன்று தினங்கள் வீதம் ஒன்பது நாட்கள் பூஜை செய்து வழிபடுகின்றனர் .

இது ராமாயண காலத்திருந்து கொண்டாடபடுவதாக தேவி பாகவதம் சொல்கிறது .


நன்றி தேவி பாகவதம் .


வசிகரன்.க

எழுதியவர் : வசிகரன்.க (20-Sep-14, 4:10 pm)
பார்வை : 2817

சிறந்த கட்டுரைகள்

மேலே