காதலா காதலா காதலில் அழைக்கிறேன்
கவிஜியின் சமீபத்திய மூன்று கவிதைகள் தளத்தில் பகிர்ந்துள்ளேன் . ஒரு கவிதை "பால்வீதியில் தொலைந்தவர்கள்."
பால்வீதியில் தொலைந்தவர்கள் - ஒரு காதல் நிஜமோ / தோல்வியோ / காமமோ எப்படி எழுதி இருக்கிறார்...பார்க்கவும் . இம்மாதிரி காதல் கவிதைகள் 100 கூட தொடர்ந்து படிக்க முடியும் நம்மால்.
ஆனால் தளத்தில் காதல் கவிதைகள் தொடர்ந்து இரண்டுக்கு மேல் படிக்கமுடியவில்லை. ஒரே மாதிரி இருக்கிறது . போர் அடிக்கிறது . அதை தவிர வேறு எழுதுவதே இல்லை பலர் .... " உனக்கு வயசாயிடுச்சு லே " என்று நீங்கள் சொல்லலாம் .அதுவும் சரிதான் எனினும் ....
கவிஜியின் ஊசலாடிய தொங்கு பாலம் , புதைக்கப்பட்ட புத்தன் அவற்றையும் பகிர்ந்துள்ளேன்..இரண்டையும் படியுங்கள் . இவற்றில் வாழ்வியல் , போராட்டம் வெளிப்படுகிறது .
இளைஞர்களே ...நீங்களும்
கொஞ்சம் காதல் தவிர்த்து வேறு எழதுங்கள் . காதலும் எழுதுங்கள் .
கம்பன் / வள்ளுவன் / இளங்கோ / பாரதி / கண்ணதாசன் / வைரமுத்து தங்கள் இளமை காலத்தில் படைத்தவைதான் அவர்களின் சிறந்த படைப்புகள் . ஆனால் அவற்றில் காதல் மட்டுமே எழுதவில்லை .
"ஒருநாள் உலகம் நீதி பெறும் .திருநாள் நிகழும் தேதி வரும்" என்றுதானே வைரமுத்து முதல் பாடலில் , தன் 20 களில் எழுதினான் .ஒரு புரட்சிக்காரனின் நம்பிக்கை வரிகள் இப்படிதான் இருக்கும் .
தன் அடுத்த பாடலில் வைரமுத்து - ஒரு காதல் நிஜமோ / தோல்வியோ / காமமோ எப்படி எழுதி இறக்கிறார் ...பார்க்கவும் .
// சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே
அந்தி மழை பொழிகிறது..
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது //
( - கம்பன் , இளங்கோ , வள்ளுவன் , பாரதி எல்லாம் வைரமுத்துவுக்கே பாட்டன்கள் .காதலையும் , வாழ்க்கை முறைகளையும் இளமையில் சுவையாக சொன்னவர்கள் )
இவர்களில் யாரையும் படிக்க வேண்டாம் . காலை தினசரியேனும் படியுங்கள் . அதுதரும் உங்களுக்கு 1000 வாழ்வியல் கவிதைகள் .
"காதல் இளவரசன்" என்ற கமலுக்கு மூன்றாம் பிறை ( ஒரு காதல் நிஜமோ / தோல்வியோ / காமமோ எப்படி வெளிப்படுத்துகிறான்...பார்க்கவும் .) , நாயகன் ( வாழ்வியல் ) , இந்தியன் ( போராட்டம் ) என்ற மூன்று படங்கள்தான் சிறந்த நடிகர் தேசிய விருதை பெற்று தந்தன .
நீங்களும் எல்லாவற்றையும் நன்றாய் வெளிப்படுத்தக் கூடியவர்கள் .எழுதக் கூடியவர்கள் . விருது வாங்கக் கூடியவர்கள் .
அந்த எதிர்பார்ப்பில் தான் இதை எழுதினேன் . அவ்வளவே .
புரிதலுக்கு நன்றி .
- பி . கு : நீங்கள் உங்கள் திரையில் "படைப்பு " சொடுக்குங்கள் . பின் " அதிகமாக பார்த்தவை" கிளிக் .
பின் சென்ற வாரம் , சென்ற மாதம் , அனைத்தும் ஒன்றொன்றாய் தனியே சொடுக்கி பார்கவும் .
கட்டாயம் முன் வரிசைகளில் காதல் கவிதைகளே இருக்கும் .
இப்போது "தேர்வு செய்யப்பட்டவை " சொடுக்கி
பின் "சென்ற வாரம்" , "சென்ற மாதம்" , "அனைத்தும்" ஒவ்வொன்றாய் பாருங்கள் .
அதே காதல் கவிதைகள் அங்கு இருக்காது.