பாதகம் செய்திட பாரில்

கடவுள் கருவறைக்கு அனுப்பினார்
காதலுடன் கருவறையில் நான்
பிறப்பிற்கு காத்திருந்த தாய்மீது
பிறப்பிற்கு முன்னரே கல்லறைக்கு
செல்லும் நாள் குறிக்கப்பட்டதை
அறியாமல் முன் பிறந்த மூடர்கள்
என் பிறப்பிற்கு நாள் பார்க்காமல்
இறப்பிற்கு நாள் பார்த்தார்கள்
பெண் என பிறக்க இருப்பதாலா
இரக்கமற்று மகள் எனபாராமல்
எமனுக்கு பலி கொடுக்க பாவி
மனம் எடுத்த முடிவு பாழும்
உலகில் பெண்கள் வாழ
பிரச்னை தான் என்ன இதற்கு
மனிதன் காரணமன்றி இல்லை
பிறிதொன்றும் அவன் பிறப்பே
ஒரு பெண்ணால் என்பதை ஏன்
மறக்கிறான் மண்ணை பார்க்குமுன்
மண்ணுக்குள் தள்ள பார்க்கும்
இவர்களின் தாயும் பெண் என
மறந்து விடுகிறார்களே இதனினும்
கொடியது ஆண்இல்லை என்று
அறிந்ததும் பெண்ணே தன்இனம்
என்பதை மறந்து பாதகம் தனை
செய்யத் துணிவதுதான் விந்தை
துள்ளித்திரிந்து விளையாடுவதை
வேடிக்கை பார்க்கும் விழிகள் குழி
தள்ளி மூடபார்க்க அவசரப்படுவதேன்
அவர்களை இன்று போல் அன்று
செய்திருந்தால் இன்று எனக்கு
இந்த நிலைவர இவர்கள் எப்படி
காரணமாவார்கள் சுமந்து நிற்பவள்
என் உயிரைகாப்பாற்ற நினைப்பாளா
இல்லை உடன் கூடி சதி செய்திடுவாளா
கேள்விகள் பல என்னுள் பதிலில்லாமல்
கருவறைக்குள்ளேயே பதில் சொல்ல
யார் என் கேள்விக்கு பதிலில்லாமலே
பலியாகி விடுவேனா மண்ணுக்கு
பதில் சொல்லும் கடவுளுக்கும்
படையல் போட்டு பொங்கல்வச்சு
பதுமையாக இருக்கச் செய்திடராங்க
என் போன்றோர் முடிவுதான் என்ன
மாற்றம் கொண்டு வரும் மானுடம்
மண்ணில் ஜனிப்பது எக்காலம்
அக்காலம் வருமுன் எத்தனை
என்போன்ற பெண் குழந்தைகள்
காணாமல் போகப் போகிறார்கள்
தெரிந்தவர் கூறிடுங்கள் முடிந்தால்
இந்த கூத்தை தடுத்திட முயன்றிடுங்கள்
புண்ணியம் செய்ய பயன் நல்குமே பாரில்....

எழுதியவர் : உ மா (20-Sep-14, 11:36 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 62

மேலே