தனிமைகாடு

நிழல்கள் பேசிட கண்டதுண்டா ..?
நொடிகள் நகர்த்திட முயன்றதுண்டா ..?
வலிகள் பெற்றிட விழைந்ததுண்டா ..?
வாசல்கள் வசப்படாது போனதுண்டா..?
திசைகள் அறியாது திகைத்ததுண்டா..?
கனவுகள் கண்ணோடு மறைந்ததுண்டா..?
வார்த்தைகள் பேசிடாது புதைத்ததுண்டா..?
மௌனங்கள் மொழிபெயர்க்க பயின்றதுண்டா..?
கேள்விகள் கூறுப்போட்டு கொன்றதுண்டா..?
இறப்புகள் கணம்கணம் நிகழ்ந்ததுண்டா..?
காட்சிப்பொருளாய் வாழ்ந்ததுண்டா..?
இவைகள் உணர்ந்திடாது,
என்றும்
புரிந்திடாது,
என் தனிமை..
உனக்கு..!

எழுதியவர் : கல்கிஷ் (20-Sep-14, 7:58 pm)
பார்வை : 377

மேலே