தொடுவானம்

நகர்விற்கான சாத்தியமில்லை,
காலங்களின் கட்டளைப்படி..
உண்டிட,
உறங்கிட,
உணர்ந்திட,
அனைத்திற்கும் மேல்
உழைத்திட..

பறப்பதற்கான பாதைகள்
பகுத்தறிவு
விதைகளில்
பூட்டப்பட்டிருந்தன..

நம்பிக்கையற்று இருந்தேன்;
அறியாது
இருப்பதில்தான்
எவ்வளவு ஆனந்தம்..!

வீங்கிப்பெருத்த வயிற்றினுள்ளே
வினாவுமில்லை..!
விடையுமில்லை..!

ஆசை தீர
தொடுகிறேன் ,
கருவறை
என்னும்
வானத்தை..!

எழுதியவர் : கல்கிஷ் (20-Sep-14, 7:55 pm)
பார்வை : 176

மேலே