மண்ணுதான்

பாத்து நடந்துக்க! பக்குவமா வாழ்ந்துக்க!
வேத்து விறுவிறுக்க வேலைசெய்-சேத்துப்
பணத்தைப் பெருக்கிப் பலசொத்து வாங்கி
குணத்தோடு வாழு கருதிக்-கணக்குல
என்னதான் ஏறி உலகேநீ கொண்டாலும்
மண்ணுதான் சோறு மறக்காம- என்னைக்கும்
அள்ளிக் கொடுக்கும் அதைநீ மறக்காதே
துள்ளிக் குதிக்காதே டா!...

எழுதியவர் : அபி மலேசியா (21-Sep-14, 12:06 am)
பார்வை : 339

மேலே