உப்பரிகை உறவுகள்

நண்பனே!!!!
எச்சரிக்கை
இரவுகளில் மட்டுமல்ல...
வெளிச்சத்திலும்
வீழ்ந்துவிடாதீர்....

போலி
நண்பர்கள் சிலர்
புகழ்ந்திடுவர்...
புழுகிடுவர்...
புழுதியில் நீவீர்
வீழ்ந்துவிடாதீர்....

வீண்
உலகம் உனை
உசுப்பேற்றும்....
விரும்பிடா பணிகள்
வரவேற்க்கும்....
பொய்யான ஏணியும் உனை
புரவியேற்றும் - வெறும்
புகழுக்காக நீவீர்
வீழ்ந்துவிடாதீர்....

எச்சரிக்கை
இரவுகளில் மட்டுமல்ல...
நண்பனே!!!!
வெளிச்சத்திலும்
வீழ்ந்துவிடாதீர்....


சிவகவி

எழுதியவர் : சிவகவி (21-Sep-14, 8:54 pm)
பார்வை : 99

மேலே