தராசு

விஞ்ஞான வளர்ச்சி ...
வித்தியாசமான விதிமுறைகள் ...
கலாச்சார மாற்றங்கள் ...
நவ நாகரீகம் ...

இந்த தலைமுறை
வளர்ச்சியால்
வளருகின்றதா ?
வீழ்கின்றதா ??

ஒரு சிறிய அலசல் ====

பணியையும்
பணத்தையும்
பதவியையும்
பாதுகாக்க
ஈன்றெடுத்த
மழலை செல்வங்களை
மன வேதனயுடன்
அந்நிய செவிலியிடம்
அனாதையாக விட்டு விட்டு
பறக்கும் தாய்மார்கள் ........

மாலை விளையாட்டின்
மகத்துவத்தை
வலைதளத்தின் மூலம்
அறிந்து கொள்ளும்
கணினி சிறைவாசி சிறுவர்கள் ===

ஒன்றிலக்கத்தின் பின்
மன அழுத்தத்துடன்
மருண்டு ஓடும்
மாணவர்கள் ====

காதல் என்ற
கம்பி வலையில் சிக்கி
காயங்களை சந்திக்கும்
கல்லூரி மாணவ மாணவிகள் ===

தமிழ் நாட்டில்
தமிழனுக்கு பிறந்திருந்தும்
தமிழ் அறியா
அவல நிலை ====

உறவுகள்

கணினி
கைபேசி

உயிரற்ற உறவுகளுடன்
ஒன்றிணைந்து
உயிர் உள்ள உறவுகளை
மண்ணில் புதைக்கும் காலம்==

சமுதாய அந்தஸ்திற்கு
சவால் விட்டு
சரமாரியாய்
செலவு செய்து
பகட்டாய் திருமணங்கள் ===

மன ஒற்றுமையில்
வேற்றுமை வளர்ந்து
நீயா நானா ? என
மௌனமாய்
விவாகரத்துக்கள் ===

பணம் காகிதம் தான்
இருந்தாலும்
குப்பை தொட்டியில்
போட முடியாது என
பணத்தின் பின்
மனிதர்கள் பேயாய் ஓட்டம் ==

மண்ணில் பிறந்தேன்
விழுந்தேன்
எழுந்தேன்
வளர்ந்தேன்
வாழ்ந்தேன்
முழுமை அடைந்தேன் என
எண்ணும் போது
முதியோர் இல்லத்தின்
முகப்பு
முள்ளாய் குத்தியது

விஞ்ஞானம் வளர்ந்தாலும்
மனிதம்
செத்து விட்டது =======

எழுதியவர் : kirupaganesh (21-Sep-14, 8:48 pm)
பார்வை : 551

மேலே