மண்ணும் மரமும்
உன்னிடமே பிறந்து
உன்னாலே வளர்ந்து
உனக்காக தலைவணங்கி
நிழல் தந்து சுகம் தந்து
உன் மக்கள் உண்டு மகிழ
சுவைமிக்க கனி தந்து
காற்றாட இலை அசைத்து
குளிர் வாடை உனக்களித்து
குகை போல நான் இருந்து
குழந்தைகளைக் காக்கின்றேன்
நீ பெற்ற பிள்ளையம்மா
மாமரம் என்று பெயர்
என் கனிகள் கொடுப்பதற்கு
கல்லெறியும் தாங்கிடுவேன்
கண்ணீரும் வடித்திடுவேன்
இருந்தும் உன் பொறுமை
எனக்கு உண்டு உணர்ந்திடுவேன்
நிலமென்றும் பூமிஎன்றும்
பொறுமைக்கு உதாரணமாய்
நீ இருப்பாய் என் தாயே

