கண்களால் கைது செய்தவன்
சன்னல் ஓரத்தில்
சின்னதாய் ஓர் சல சலப்பு
சிறிதும் யோசிக்காமல்
சட்டென்று ஓடி சென்று பார்த்தேன் !!
எதிர் பாராமல்
எதிரில் கண்டேன்
எனக்கு சொந்தமான
என்னழகு கண்களை !!
கண் சாடை காட்டி
கண்ணுக்குள் நின்றான்
கண்சிமிட்டிய கனத்தில்
காணாமல் சென்றான் !!
எங்கே சென்றான் ?
எவ்வாறு சென்றான் ?
எதற்காக சென்றான் ?
ஏதும் அறியாமல்
ஏக்கத்துடன் பார்த்து நின்றேன்
எதிர்பட்ட கண்கள்
எப்போது எனக்கு
சொந்தமாகும் என அறியாமல் !!