அந்தப்புரத்திருடன்
அந்தப்புரத்திருடன்
====================
ஒருமுறை
அழகாக சிரித்துவிட்டு கேட்கிறான்
என்னவேண்டுமோ கேள் என
இதுவரை
நீ தந்தவற்றை எல்லாம்தான்
தவணைமுறையில்
சேமித்துவைத்துவிட்டேனே
மேலும் மேலும்
நிலைப்பதிவுசெய்யவேண்டுமாய்
இடம் பார்க்கிறேன்
உன்னிடம் பேசாததாலோ என்னவோதான்
இப்பொழுதெல்லாம்
கவிதைகளே தோன்றமாட்டேன் என்கின்றன
என்று சொன்னவளிடம்
நகைப்பூட்டிநகைப்பூட்டி
மிரளச்செய்யும் என் கருவிழிகளை
வரியில் வர்ணித்துவிடுகிறான் பாருங்களேன்
ஒரு அந்தப்புரத்திருடன்
"உன் இரு கரும்பௌர்ணமிக்குள்
என்றோ இடறிவிட்டேன்
இனியேனும்
இமையடைப்புப்போராட்டம் செய்துவிடேன்
நான் ஜீவ சமாதியாகிவிடுகிறேன்
உனக்குள்" என
அனுசரன்