வரதட்சணை--------நிஷா

அச்சம் மடம் நாணம் என.....
ஆயிரம் விதிமுறைகள் உனக்கு...
மூன்று முடிச்சு போட்டான் உனக்கு
முதல் தவணையாய் கேட்டான்
தட்சணை. ...


வாழ வழி இல்லாதவனுக்கு
வரி தந்து நீ வாழவருகிறாய்....
வசந்தம் தந்தது நீயா!-இல்லை
வாழ்க்கை தருவது உன் பணமா!


காசு தான் உலகம் என்றால்
கால் போன போக்கில் அவன்
போகலாமே....
சுகம் காணஇடமாயில்லைஅவனுக்கு
சோறு போட உறவாயில்லை
அவனுக்கு...


நெருப்பும் அடுப்பும் உனக்கு
நீ தரும் சொகுசு வாழ்க்கை அவனுக்கு
சம்மதம் கேட்பது அவனிடம்
சங்கடம் கொடுப்பது உன்னிடம்....


என்ன இல்லை உன்னிடம்
ஏன் மவுனம் பெண்ணிடம்
பேச மறுக்கும் உன் உதடுகள்
பேதையானது உன் நினைவுகள்...


ஈரம் தோய்ந்த உன் விழிகள்..
பாரம் சுமக்கும் உன் தோள்கள்
சோரம் போகவில்லை தன்மானம்
துணிந்துடு பெண்ணே துணிந்திடு....

எழுதியவர் : நிஷா (26-Sep-14, 3:17 pm)
பார்வை : 174

மேலே