பிரிவு

கலைந்து போன மேகம்
கரைந்து போன நிலவு
உதிர்ந்து போன இலைகள்
மறைந்து போன சூரியன்
விலகி போன இரவு
தொலைந்து போன வானவில்
இவைகளெல்லாம் மீண்டும்
ஒருநாள் வரும் அதுபோல
நீ ஒருநாள் வருவாய்!
உன்னை நானறிவேன்
என்னையின்றி யார் அறிவார்
உன் கண்ணில் நீர் வடிந்தால்
என்னையன்றி யார் துடைப்பார்?

- ஸ்ரீசந்திரா

எழுதியவர் : srichandra (26-Sep-14, 7:08 pm)
Tanglish : pirivu
பார்வை : 172

மேலே