நானும் சொல்வேன் பல்லாண்டு-அகனுக்கு

அன்பர்கள் நேசன்
அமிர்த கணேசன்
அகனென வந்து நிறைந்தீர்கள்-எங்கள்
அகந்தனைக் கவர்ந்து சிறந்தீர்கள்

அன்பர் நெஞ்சில்
தொட்டில் சூரியன்
ஆடிடத் தொட்டி லிட்டீர்கள்-நீங்கள்
அன்பால் கட்டி விட்டீர்கள்

பொட்டில் சூரியன்
வைத்தவர் போலப்
புதுவை நகரில் உறைகின்றீர்-
புதுமை எல்லாம் புரிகின்றீர்-


தொட்டில் சூரியன்
சுட்டிச் சூரியன்
தொட்டான் உச்சம் தொட்டீர்கள்- முத்த
மிட்டான் வெற்றி பெற்றீர்கள்

இலக்கிய மரபை
காக்கும் பணியில்
எத்தனை சேவை புரிகின்றீர்-கவிதை
புத்தகம் தொகுத்துத் தருகின்றீர்

இலக்கி யம்பும்
இலக்கியம் படைக்க
எத்தனை முயற்சி எடுக்கின்றீர்-பிர
யத்தனம் கோடி செய்கின்றீர்

இலக்கிய உறவாய்
கலக்கும் நீங்கள்
இறவா நூல்கள் தருகின்றீர்
இனிய கவிதை வரைகின்றீர்


இலக்கியம் மறவா
இலக்கிய மறவர்
என்னும் பெருமை பெற்றீர்கள்
இன்னும் இன்னும் உயர்வீர்கள்…!

பெரியாள் உம்மை
சிறியேன் வாழ்த்த
பேசும் திவ்ய பிரபந்தம்- நம்
பாசம் அந்த தமிழ்பந்தம்

பெரியாழ் வாராய்
பெருமாள் உமக்கு
நானும் சொல்வேன் பல்லாண்டு-
நாலா யிரத்தின் சொல் ஆண்டு…

எழுதியவர் : சு.ஐயப்பன் (27-Sep-14, 11:33 am)
பார்வை : 162

மேலே