மாமனே உன் வரவை எண்ணி

உயிரானவனே....
கடல் கடந்து சென்றாய்
நமக்காக என்று....
விழிகளில் வலி...
நம் பிரிவை எண்ணி....
மனமில்லாமல் அனுப்பி வைத்தேன்....
வருடங்கள் ஆகும் என்றாய்
நாம் சந்திக்க ....
உன் முகம் பார்க்க நினைக்கும்
நிமிடமெல்லாம் வலி தான் என்னுள்...
சாதரணமாக சொல்லிவிட்டாய்
இன்னும் சில காலம் காத்திரு என்று...
உனக்காக ஏழுஜென்மமும்
காத்திருப்பேன்....
காத்திருப்பதும் சுகமான வலி
தான் என்று உணர்ந்தேன்...
ஆனால் இதயம் மட்டும் அழுகிறது...
நம் நிரந்தரமற்ற பிரிவை எண்ணி...
தினம் தினம் நாட்களை எண்ணுகிறேன்
உன் விழியில் என்னை காண...
நாளை நம் மணநாளை காண
காத்திருக்கிறேன் ஒவ்வொரு நொடியும் ....
இன்று எப்போதும்
சண்டையிடும் காதலர்களாக ...
நாளை என்றும் அன்பான
கணவன் மனைவியாக ...
என்னவனே உன் வரவை
எண்ணி உன்னவள்....