பரதேசி வாழ்வு

கண்ட கனவுகள் நிஜமாக
கண்டவர் எல்லாம் அகமகிழ
கண்ணீர் மட்டும் சொந்தமாகியதே!!!

சொந்தங்களும் பாராட்ட
சொத்துக்களும் நிறைவூட்ட
சோகம் மட்டும் சொந்தமாகியதே!!!

உறவுகளும் மகிழ்வூட்ட
உணர்வுகளும் இனிதாக
உள்ளம் மட்டும் சோகமாகிறதே!!!

குழந்தையவன் முகங்காட்ட
குறும்புகளும் வியப்பூட்ட
குறைகள் மட்டும் சொந்தமாகியதே!!!

கணினியில் முகங்கண்டு
கனவினில் சுகங்கண்டு
கற்பனை மட்டும் சொந்தமாகியதே!!!

பணம் என் மடிநிறைக்க
பந்தங்கள் பல தொலைத்து
பரதேசி வாழ்வுதான் சொந்தமாகியதே!!!
-வெளிநாட்டில்-

என்றும் அன்புடன் ஸ்ரீ :)

எழுதியவர் : என்றும் அன்புடன் -ஸ்ரீ- (28-Sep-14, 11:46 am)
பார்வை : 185

மேலே