என் முதலும் முடிவும் நீயடி
![](https://eluthu.com/images/loading.gif)
இன்பமே
என் கருப்பு நிறத்தாளை
கண்கொட்ட காண்கையில் ...!
வெட்கமே
என்னவளின் வெளிர் நிறை
பார்வை எனைத்தீண்டுகையில்...!
ஆர்வமே
சுருண்டு நிற்கும் அவளின் கூந்தலில் கொஞ்சமாய்
தமிழின் 'ழ'கர வளைவை கற்றுக்கொண்டு கவிபாட..!
காதலே
விளைந்து விட்ட அவள் இதழை
சுவைக்கையில் எனைமறக்கும் மட்டும் ....!
கவிதையே
யாருக்கோ பெண்பார்க்கும் படலத்தில் - ஓரமாய் நின்று
எனில் ஒற்றை பார்வை உதிர்த்த கருங்குழல் பாவையவள்
சம்மதமே
திடீரென நிகழ்ந்த பயண மாற்றத்தில்
எனக்கானவளை கண்டுகொண்டதில் ...!
-c.j.c