என்மனதில் அவள் ஓவியம்

காதிலே மணி ஆட
கால்களும் சேர்ந்தாட
கைகள் ரெண்டும் காற்றில் ஆட
அலையலையாய் அசைந்து வரும்
ஒலி கேட்டு மனம் கூத்தாட
மொட்டை மாடி நிலவிலே
பட்டுத்துணி அழகிலே
பாவை அவளின் நிலை தன்னை
பார்த்து பார்த்து வியந்து கொண்டே
இசைக் காற்றில் மனம் மயங்கி
இனிதான அவள் குரலை
அமைதியாய் ரசித்துக் கொண்டே
மனசுக்குள் மழையடிக்க
வானிலே இடி இடிக்க
வாடைக் காற்றும் சேர்ந்தடிக்க
காவியமாய் அவள் முகம்
ஓவியமாய் என் மனதில் .....!

எழுதியவர் : ஜேம்ஸ் (29-Sep-14, 2:15 pm)
பார்வை : 162

மேலே