+ஊக்கம் தரும் நட்பு+

எறும்பு தேசத்தின் கொண்டையூசி வளைவுகள்!
கரும்பின் சுவையென கவிஜியின் முயற்சிகள்!
தொடரட்டும் தோழர்களே தொடர்ந்திடுவோம் வாருங்களே!
பரவட்டும் நட்புக்கொடி பக்கம்வந்து பாருங்களே!
விதிமுறைகள் தெரிந்துகொண்டு விருப்பமுடன் படிப்போமே!
தனிவிடுகை கிடைத்தவுடன் அடுத்தபாகம் படைப்போமே!
புள்ளிவைத்து ஆரம்பித்த கவிஜிக்கு வணக்கங்கள்!
அழகான கோலமிட்டு வழங்கிடுவோம் ஊக்கங்கள்!
எழுத்தளித்த நட்பின்வழி படைப்புகளால் இணைந்திருப்போம்!
கருத்தளித்து படைப்புகளை பலபேரை பார்க்கவைப்போம்!
புதுமுயற்சியில் இறங்குவோரை கரம்கொடுத்து பாராட்டுவோம்!
ஊக்கம்தரும் நட்புக்களை ஊரறியச் செய்திடுவோம்!