நான் அவள்

காற்றில் உள்ள தென்றல் நான்,
உன் மூச்சில் உள்ள வெப்பம் நான்,
உன் குடி தண்ணீரின் வெண்மையும் நான்,
வானில் உள்ள கரு மேகமும் நான்,
உன் கருங்கூந்தலின் கருமை நான்,
பிறரை ஈர்க்கும் பிறையும் நான்,
என்னை பார்கின்ற உன் கரு விழியும் நான்,
அசையாமல் நிற்கும் மலையும் நான்,
சிறு அசைவிற்கு அழகாய் அசையும் உன் விசையும் நான்,
நேற்று அடித்த புயலும் நான்,
இன்று துடிக்கும் உன் இதயமும் நான்,
சிற்பிக்குள் உள்ள முத்தும் நான்,
உன் முத்தாகிய மழலை பேசும் நான்,
அண்டத்தின் வாழ்கை நான்,
ஆனால் என் வாழ்கை நீ...

எழுதியவர் : ஜெயப்ரகாஷ் (29-Sep-14, 11:08 pm)
Tanglish : naan aval
பார்வை : 120

மேலே