ஒரு அழுகையின் போராட்டம்
..."" ஒரு அழுகையின் போராட்டம் ""...
உணர்வோடு ஒரு போராட்டம்
முடியவில்லை ஏனென்றும்
தெரியவில்லை இப்படியான
நாள் எனக்காய் அமையுமென
நானும் நினைக்கவுமில்லை,,,
நலனோடு வளம்பெற என்
நலன் விரும்பும் நல்லவர்கள்
சொந்தம்கூடி அறிவுரைக்க
என் புத்திக்கு புரிவதேனோ
மனதிற்கு போய் சேரவில்லை,,,
வருத்தமாகவே இருக்கிறது
வருத்தத்தை நான் தருவதாலே
நெருக்கமான நெஞ்சங்களுக்கு
இயலாமையென்னும் இடறல்ல
என் இதயத்தின் நிலையாது,,,
எனக்காய் எனக்கு மட்டும்
அழுதிடும் விழிகளை துடைக்க
என்னாலும் முடியவில்லை
அதற்கெனவே வருந்துகிறேன்
அழுகையோடு சிரிக்கிறேன்,,,
நினைவுகளை பரிமாற்ற என்
முற்றத்து நிலவோடு நித்தம்
அமாவாசை இரவாக எந்தன்
நச்சத்திரத்தை பறிகொடுத்து
நடுப்பகலிலே தேடுகின்றேன்,,,
நிலையான நிலையில்லை
நினைவாலே உறக்கமில்லை
சொல்லவுந்தான் இயலவில்லை
சொல்லாமலும் முடியவில்லை
சொல்லோடு போர்செய்து என்னால்
வெல்லவுந்தான் தெரியவில்லை,,,
என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...