மழை
ஓலைக் குடிசைக்குள்
நீர் அருவியாய்
குற்றாலம்..!
அடிக்கி வைக்கப்பட்ட
பாத்திரங்கள் அங்கொன்றும்
இங்கொன்றுமாய் முளைத்திருக்கின்றன..!
மழை வேண்டி
முளைப்பாரியிடும் ஏழை உழவன்
மழை வேண்டாம் என்று
ஒப்பாரி வைக்கும் ஏழை
இன்னொருவன்..!
மாடிவீட்டு முற்றத்தில்
மழையை ரசிக்கும் ஒருவன்
மச்சிவீட்டில் ஒழுகும் நீரை
வெறித்தப்படி இன்னொருவன்..!
எது எப்படியோ
சந்தோஷம் என்பது
ஒருவருக்கு மட்டுமே
வாய்திருக்கிறது..!
பாவம் அந்த கார்மேகம்
யார் வேண்டுதலுக்கு
செவிசாய்க்கும்?
மத்தளத்துக்கு இரண்டு பக்கமும்
இடிபோல வானுக்கும் இடி
மழை வந்தாலும் வராவிட்டாலும்...!
ஸ்ரீசந்திரா