எதிர்கால தமிழ்நாடு
2050...
புத்தம் புது
தமிழ்நாடு..
சத்தம் இல்லா சாலைகள்
விளம்பர மற்ற நெடுசுவர்கள்
கண்ணாடி கட்டிடங்கள்
அதிநவீன கார்கள்..
தூசு படியா காற்று ..
தூய்மையான சுற்றுபுறம்..
நகர கிராம பேதமில்லை
நாற்புறமும் முன்னேற்றம் !!
சீரான பொருளாதாரம்
சிந்திக்கும் புதுமனிதர் !!
வாரம் ஒருநாள்
வாழும் மதம்...
ஆறு நாட்கள்
ஆற்றும் பணிக்காய் !!
குடியேறி இருக்கிறார்கள்
மேற்கத்தியர்கள் ..
நாடு பிடிக்க அல்ல
ஏடு படிக்க...
தமிழன் வளர்ச்சி பார்த்து
தமிழின் அடர்ச்சி பார்த்து
மோகத்தினால் கொண்ட
தாகத்தினால்...
வரவேற்ற தமிழன்
முதல் முறையாய்
முதுகு நிமிர்ந்து.....
நான்கு மொழி பயிலும்
நாகரிக பள்ளிகள்
நாங்கள் உள்ளோம் என்று
நம்பிக்கை தரும் பிள்ளைகள்
இணைத்து வைக்கும்
இணையத் தொடர்பு
இலவசமாய் எங்கேயும்..
புதைந்து போன
சாதி சண்டைகள்...
மறைந்து போன
மடமை அரசியல்...
பூக்கள் சொரியும் சாலைநடு!
பொதுவாய்ப் போன
கடமை உணர்வு!
இன்னும்
இருபது ஆண்டுகளில்
இந்தியா முழுதும்
இப்படியே மாறிவிடும்
நம்பலாம்....
2070இல்
இதை எழுதிய
என் வயது 88 ஆகி இருக்கும்!
நீங்கள் படித்தவை
நிசம் ஆகி இருக்கும்....
இவை ஆரூடமல்ல..
என் ஆசைகள் !!