இதுவும் தோனல

முதன்முறை உன்னை பார்த்தபோது
ஒரு மின்னல் தோன்றவில்லை,
காற்றில் சுகந்தம் வீசவில்லை,
மரங்கள் பூக்களை உதிர்க்கவில்லை,
மின்சாரம் பாய்ந்து மேனி மெய்சிலிர்க்கவில்லை,
மனதிற்குள் ஆனந்த யாழி இசைக்கவில்லை,
விழிகளுக்கு நீ தேவதையாய் மாறவில்லை,
புவியிலிருந்து வேறு பிரதேசம் நான் செல்லவில்லை,
முதுகளில் சிறகுகள் பிறக்கவில்லை,
வண்ண ஆடைகளோடு யாரும் என்னுடன் நடனமாடவில்லை,
ஆசையா பொருட்கள் பேசவில்லை,
நிலவு உன் முகமாய் மாயம் காட்டவில்லை,
உணவை மறக்கவில்லை ,
உன்னுடைய முகம் கூட தெளிவாய் நினைவில்லை.,

இரவெல்லாம் துயிலிழந்து சிந்திக்கிறேன்
எப்போது உன்னை காதலிக்க தொடங்கினேன் என்று ...

எழுதியவர் : காதலித்தவன் (3-Oct-14, 6:17 pm)
சேர்த்தது : க.சண்முகம்
பார்வை : 70

மேலே