கனவுகள் மெய்ப்படவேண்டும்
சில்லென்று வீசிய தென்றல் இதுவோ - என்
வாழ்வில் நான் கண்ட இன்பம் அதுவோ.
பூக்களில் நான் பார்த்த உயிர்ப் பூவும் நீதான் -சிறு
புன்னகையில் என் நெஞ்சை தொட்டவளும் நீதான்.
கல்லினில் உன் பெயரை கனிவோடு பதித்தேன் -அந்த
கல் கூட இன்று வைர கல்லாகப் பார்த்தேன்- உன்னிடம்
சொல்லிவிட ஆயிரம் கவிதைகள் வடித்தேன் -அதில்
வார்த்தைகள் மாறடைய எழுதிய அத்தனையும் கிழித்தேன்.
பூக்களாய் ஆகுமுன்னே புழுதியில் விழுந்தேன்-என்
நெஞ்சினில் நெருஞ்சி முள் குத்திட எழுந்தேன்.
வாடிய மலர் எனைப் பார்ப்பாயா என்று -தினம்
வாசலில் உன் முகம் பார்த்து நான் மடிந்தேன்.
இனியவளே .... சோலையாய் உன் மனதில் நான் இருக்க வேண்டும்
மாலையாய் உன் கழுத்தில் நான் இருக்க வேண்டும்
சேலையை உன்னுடன் நான் சேர்ந்திருக்க வேண்டும்
இக்கனவும் நிஜமாகும் நாள் நெருங்க வேண்டும்..
-