நீ வருவாய் என

உன் முகம் பார்க்க தவம் இருந்த
மரத்தின் அடியில் இன்றும் அமர்ந்திருக்கின்றேன் "தனிமையில்"
பூவினை மறந்த வண்டு போல் -என்னை நீ
பிரிந்து சென்ற நாள் என் இதயத்தில் குத்தி விட்ட
ஆணி போல் வலித்துக் கொண்டிருக்கின்றது....

நேற்றுவரை உன்னிடத்தில் இருந்த காதல்
இன்று சொல்லாமல் சென்றுவிட்ட சேதிதான்
யாதென்று புரியாமல் புலம்புகின்றேன்..
பார்த்திருந்து பார்த்திருந்து பாதியிரவு கடந்து
வீடு சென்று கட்டிலில் புரண்டு அழுகிறேன்..

உலகுள்ள வரைக்கும் உதிராது நம் காதல் என்று
உறுதியோடு சொன்ன நீ- இன்று
சொல்லாமல் சென்றதுதான் என்னவென்று
நெஞ்சத்தில் எழுகின்ற கேள்விகளுக்கு
விடைதெரியாமல் வாழ்கின்றேன் தினம் தோறும்

காத்திருப்பேன் அதே மரத்தடியில் என்றேனும் நீ வருவாய் என..

எழுதியவர் : நா.சிறிதரன் (3-Oct-14, 8:40 pm)
Tanglish : nee varuvaay ena
பார்வை : 140

மேலே