எம் நாடு வல்லரசாகவில்லை என்றுகூட கவலைப்படவில்லை

சுதந்திர தின நல்வாழ்த்துகள்...!!!

உண்மையில் 4 வருடங்களாக, நான் நம் தேசிய பாடலைப் பாடவில்லை
அதாவது பள்ளி முடிந்ததில் இருந்து இதுவரையில் “ஜன கன மன” பாடவில்லை?
இதற்காக நான் வெட்கி தலைகுனிந்து மண்டி இடுகிறேன்
என் மதிப்பிற்குரிய இந்தியத் தாயே...!!!
அன்று வரையில் 2000 பேர் கூடும் மைதானத்தில்,
தூய்மையான வெள்ளை நிற உடை அணிந்து..
மிலிட்டரி மாதிரி காம்பீரமாக பூட்ஸ் காலணி அணிந்து..
கையினில் தேசிய கொடி காப்பும், நெஞ்சினில் தேசிய கொடியையும் பெருமையாக சுமந்து வீர நடையிட்டு முதல் வணக்கம் கூறி வந்தேன்...

இன்று நினைவுகள் மட்டும் என்னிடத்தில் சுமந்து, நீ வானளாவி பறப்பதை கூட காண வழியின்றி அந்த தொல்லைகாட்சியில் பார்க்க வேண்டியதாய் இருக்கிறது..

இந்நிலை ஏன் ???
கல்லூரி சென்றுவிட்டதால் நான் இந்திய குடிமகள் இல்லையா?
அல்லது கல்லூரியில் சுதந்திர தினமோ, குடியரசு தினமோ கொண்டாட கூடாது என்று இருக்கிறதா? அல்லது தேசியப் பாடலைதான் பாடக் கூடாது என்றிருக்கிறதா?

அப்படியொன்றும் இல்லைதானே..!
பின் ஏன் கொண்டாடுவதில்லை..?

தேசிய கோடிக்கு மரியாதை செலுத்தி, முன்னால் தியாகிகளை நினைவு கூர்ந்து பெருமை படுவதைவிட இன்று “விடுமுறை” தான் நமக்கு சந்தோஷம் தருவதாய் மாறியது..

நம் நாடு நமக்கு செய்யும் நன்மைகளுக்கு, நாம் என்ன செய்கிறோம்(?) என்று எனக்கு தெரியவில்லை..
ஆனால் அன்று வரை இந்த தேசிய கீதத்தையாவது பாடி வந்தோம்....
இன்று அதுவும் இல்லை...!!!

என் பங்குக்கு, நம் நாட்டு தேசியகீதத்தை ஒருமுறை பாடி முடிக்கிறேன்..
இந்த வரிகளின் விளக்கத்தை நண்பர் ஒருவரின் பதிவின் மூலம் அறிந்து பகிர்ந்து கொள்கிறேன்..
“ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத மராத்தா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ சுப நாமே ஜாகே,
தவ சுப ஆஷிஷ மாகே,
ஜாஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.

தமிழாக்கம்
~~~~~~~~~~~
மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல யமுனா கங்கா
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.”

சொல்ல மறந்துட்டேன்..
இறுதியாக நான் பங்கு கொண்ட சுதந்திர தின விழாவில் உரை நிகழ்த்த வேண்டி இருந்தது.. இதுவும் பள்ளியில்தான்..
அன்று எம் பள்ளிக்கு விருந்தினராக வந்திருந்த DSPயின் பெயர் அந்நாளோட ஒத்துபோனது...???

ஆம் “சுதந்திரராஜன்”..!!!
ஆனால் அதுவே வம்பா போச்சு..?
அவர் பெயரை “சுந்தரராஜன்” சொல்லிட்டேன்..!!! 

பின் மேடை அருகில் இருந்த ஆங்கில ஆசிரியர் தான் எடுத்து கொடுத்தார்! “சுதந்திர ராஜன்”னு.. ஹ்ம்ம் தவறை திருத்தி மறுபடி அவர் பெயரை சரியாக உச்சரித்தேன்...

இனிமையான நினைவுகள் அது.....!!!
மீண்டும் ஒருமுறை சுதந்திர தின நல்வாழ்த்துகள் அனைவருக்கும்!!!

எம் நாடு வல்லரசாகவில்லை என்றுகூட கவலைப்படவில்லை..
தினம் நூறு இறப்பு செய்தி காணும்போதும்..
கடத்தல், கொள்ளை, ஊழல், வறுமை, வன்கொடுமை, குழந்தைத் திருமணம்,
தினமொரு ஆர்பாட்டம், பிரிவினை என எந்நாளும் அறியும்போதும்..
இது நம் 1947 ல் விடுதலை பெற்ற நம் இந்தியா தானா என சந்தேகக்கிறேன் !!!
எதுவாகட்டும் அன்று நமக்காக போரிட்டு சுதந்திரம் பெற்று தந்த நம் தேசிய தலைவர்களுக்கு நன்றிகள் கூருவோம்..!!!
நாம் வளர்ந்து வீட்டையாவது உயர்த்துவோம்..!
நம்மோடு நம் நாடும் வளரும்..!!
அடுத்த தலைமுறைக்கு தலைசிறந்த இந்தியாவை பரிசளிப்போம்..!!!
ஜெய் ஹிந்த் !!!
சுதந்திர தின வாழ்த்துகள் !!!

#இரம்யா
(15, ஆகஸ்ட் 2013 அன்று எழுதியது)

எழுதியவர் : இரம்யா (3-Oct-14, 9:11 pm)
பார்வை : 3745

சிறந்த கட்டுரைகள்

மேலே