கதவடைத்தாளா?

சதையுள்ள உடலுக்கு
உயிர் தந்தாயா?
உயிருள்ள உடலுக்கு
உணர்வளித்தாயா?
கரும் பாறை மனம் தன்னில்
நீர் இரைத்தாயா?
உன் கைக்குட்டை இதயமதில்
ஒரு விதை விதைத்தாயா?

ஈரண்டு பார்வைக்கு
மெல்ல சலனம் கொடுத்தாயா?
சலனங்கள் இதழ் வழியாய்
தேன் மழைத்தளித்தாயா?
நரமென்னும் மெல்லோடையில்
உன் நிழல் பதித்தாயா?
பிரிவெனும் வரும் போது
நீ உயிர் வெடித்தாயா?
விழி மீட்டும் இரவலாய்
நல் கனவுகள் கொடுத்தாயா?
உன் அழகு தன்னில்
காமத்தீ பரிசளித்தாயா?

காற்றில் பற்றியெறியும்
தென்றல் போல் நுழைந்தாயா?
உணர்வுத்தீயில் எறியும் போது
உன் உடை இழந்தாயா?
என் அன்பான வார்த்தையில்
நீ தினம் பனிந்தாயா?
நீ வரவில்லையென்றே
இன்றோ கதவடைத்தாளா?
'நல் மனமுள்ள' உன்னை 'மனமுள்ளே' உன்னை வர விடாமல்..??!!

எழுதியவர் : கவிசதிஷ் (15-Jun-10, 4:02 pm)
சேர்த்தது : கவி ப்ரியன்
பார்வை : 444

மேலே