பள்ளி செல்லும் பிள்ளைகளே

பள்ளி செல்லும் பிள்ளைகளே..
பாடம் படிக்க மறவாதிர்.

சொல்லி கொடுக்கும் ஆசிரியர் மனதில்
வெறுப்பை கூட கரைக்காதிர்.

உயிரை விட பெரிதென கருதும்
பெற்றோரை வணங்க மறக்காதிர்.

பாடம் படிக்கும் நேரத்தில்
பார்வை வேறெங்கும் செலுத்தாதிர்.

பார்வை வேறெங்காவது செலுத்திவிட்டு
தேர்வு நேரத்தில் விழிக்காதிர்.

கல்வி என்பது அரிதாய் கிடைப்பது
அதை பாரமென்று நினைக்காதிர்.

எம்மொழி படித்து வென்றாலும்
நம் தாய் மொழி பேச சிரிக்காதிர்.!?

எங்கெனும் உங்கள் வெற்றிகள் குவித்தும்
உங்கள் தாய் நாட்டை
போற்ற மறக்காதிர்.!

எழுதியவர் : கவிசதிஷ் (15-Jun-10, 4:09 pm)
சேர்த்தது : கவி ப்ரியன்
பார்வை : 437

மேலே