சனா மனா

டேய் தம்பி நீ உன்னோட பேரு பாண்டியன்.‌

நீ வடக்கே சுற்றுலா போய் வந்த பிறகு

பாண்டே ஆகிட்ட.‌ நம்ம கடைசித் தம்பி

தனராசு உன்னோட வந்தவன் 'தன்ராஜ்'னு

பேரை மாத்திட்டான.

@@@@@@

சரிங்க அண்ணே, இப்ப என்ன சொல்ல

வர்றீங்க?

@@@#@@@

எதிர் வீட்டு ஏக்நாத் மனைவிக்குப் போ

மாசம் பெண் குழந்தை பிறந்தது.‌ அந்தக்

குழந்தைக்கு 'சனா'னு பேரு

வச்சிருக்கிறான் ஏக்நாத், தமிழ்ப்

பேராசிரியர்.‌ பாண்டியனா இருந்து

பாண்டே ஆன நீயும் ஒரு தமிழ்ப்

பேராசிரியராகப் பல்கலைக்கழகத்தில்

வேலை பார்க்கிற. உன்‌ மனைவி

சஜ்ஜாவுக்கு போன வாரம் பெண் குழந்தை

பிறந்திருக்குது.‌ நீ அந்தக் குழந்தைக்கு

'மனா'னு பேரு வைக்கணும். அதுதான்

என்னோட ஆசை.‌

@@@##@@###

சரிங்க பையா.

@@@@@@#

என்னடா பாண்டே என்னைப் பையானு

சொல்லற?

@@@@@##

இனிமேல் உங்களை அண்ணேனு கூப்பட

மாட்டேன். பையாங்கிற‌ இந்தி

வார்த்தையைச் சொல்லித்தான் உங்களை

மரியாதையாக் கூப்புடுவேன்.

@@@###

சரி நான் சொன்ன‌ பேரு என்ன ஆச்சு

@@@@@@

என்ற பேட்டி பேரு 'சனா'. ஸ்வீட் நேம்.‌

சந்தேகம் நஹி ஹை பையா.
@@@@##@@###@@@@@#@#@########@#

Sana = Brilliance, Praise, Resplendence. Feminine name. Indian, Arabic origin.

Mana = Supernatural power, Similar, Alike.
Feminine name. Iranian(Persian), Japanese, Indian origin.

எழுதியவர் : மலர் (28-Jun-24, 6:12 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 6

மேலே