வாழ்க்கை நோக்கி ஓட்டம்
இனிமையான அதிகாலை நேரம், தேசிய நெடுஞ்சாலையில் 90-100 கிமீ வேகத்தில் ஹூண்டாய் ஆஸ்டா காரை ராஜீவ் ஓட்டிக்கொண்டிருந்தார். அவருடன் அவரது நெருங்கிய நண்பர் சுந்தரமும் இருந்தார். ராஜீவ் ஒட்டிக்கொன்று சென்றது சுந்தரத்தின் வண்டிதான். சென்னையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்ட ராஜீவ், 7.30 மணியளவில் பாண்டிச்சேரியில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தாம்பரம் சந்திப்பில், ஒரு சிவப்பு நிற மாருதி பலேனோ கார், தனது காரை வேகமாக முந்திச் செல்வதை ராஜீவ் கவனித்தார். அடுத்த 10 நிமிடங்களில், அந்த சிவப்பு நிற பலேனோவை தூரத்தில் கண்டார். 100 கிமீ வேகத்தில் ஆக்சிலேட்டரை அழுத்திய ராஜீவ், சிறிது நேரத்தில் பலேனோவை எளிதாக முந்தினார். அடுத்த 20 கி.மீ துாரத்தில் கனரக வாகனங்கள் சாலையில் உருண்டு சென்றதால் ராஜீவின் காரின் வேகம் சற்று குறைந்தது.
சுந்தரம் ராஜீவிடம் 80 கிமீ வேகத்தில் சீராக செல்லும்படி பரிந்துரைத்தார். அப்போதுதான் சிவப்பு நிற பலேனோ கார் அவர்களின் ஹூண்டாயை முந்தி விர்ரென்று சீறிச்சென்றது.
ராஜீவ் எரிச்சலடைந்தார், உடனடியாக வேகத்தை 110 கிமீக்கு உயர்த்தினார், ஒரு நிமிடத்திற்குள் மீண்டும் பலேனோவை முந்தினார். பாண்டிச்சேரி வரை இந்த நீயா நானா போட்டி, கண்ணாமூச்சி விளையாட்டு தொடர்ந்தது. வேகத்தைக் குறைக்குமாறு சுந்தரம் வற்புறுத்தியும் ராஜீவ் மற்ற காரை முந்திச் செல்வதில் குறியாக இருந்ததால் பலன் கிடைக்கவில்லை. இரண்டு டிரைவர்களும் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்ததால் வண்டியின் வேகத்தை குறைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லாமலிருந்து. சொல்லப்போனால் அவர்களில் யாரும் வாகனத்தை ஓட்டுவது யார் என்று கூட கவனிக்கவில்லை அதைப்பற்றி கவலையும் படவில்லை.
நண்பர்கள் இருவரும், பாண்டிச்சேரியில் உள்ள திருமண விழா மண்டபத்தை காலை 7.15 மணியளவில் அடைந்தபோது சுந்தரத்தின் முகத்தில் நிம்மதி கலந்த மகிழ்ச்சி காணப்பட்டது. திருமண மண்டபத்தில் நுழைந்ததும், பார்க்கிங் இடத்தில், TN06EM9880 என்ற பதிவு எண் கொண்ட ஒரு பலேனோ கார் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டு இருவரும் ஆச்சரியமடைந்தனர்.
ரோட்டில் தனது ஓட்டும் திறமையை சோதித்த பலேனோவைப் பார்த்து ராஜீவ் மிகவும் ஆச்சரியப்பட்டான். கூடவே சங்கடமானான். அந்த காரில் வந்திருப்பவர்கள், ரஞ்சனியின் (அவன் வருங்கால மனைவி) நண்பர்களாகவோ அல்லது உறவினர்களாகவோ இருக்கக்கூடும் என்று ராஜீவ் நினைத்தார்.
அன்று காலை 8 மணிக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில், ராஜீவ் மணமகன் என்பது பரபரப்பான அம்சம். COVID-19 சிறைவாசம் மற்றும் கெடுபிடி காரணமாக, ராஜீவ் கனடாவில் இருந்து வந்தவுடன், சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டார். ராஜீவ் தனது திருமணத்திற்காக, ஒரு நாள் முன்னதாகவே பாண்டிச்சேரிக்கு செல்லவிருந்தார். ஆனால், அவரது மாமாவுக்கு அவசர அறுவை சிகிச்சை நடந்ததால், பாண்டிச்சேரிக்கு வருவதை ஒரு நாள் தள்ளி வைக்க முடிவு செய்தார். அதனால் திருமண நாளன்றுதான் ராஜீவ் பாண்டிச்சேரிக்கு காரில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக, ராஜீவின் பெற்றோரும் சகோதரியும் இரண்டு நாட்களுக்கு முன்பே பாண்டிச்சேரியை அடைந்தனர். ராஜீவ் தனது சொந்த திருமணத்தில் கலந்துகொள்வதற்காக, பாண்டிச்சேரிக்கு செல்வதற்காக சுந்தரத்தின் காரை ஓட்டிச்சென்றார். மணமகளின் பெற்றோருக்கு அவரது மாற்றப்பட்ட திட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டது, ராஜீவ் சரியான நேரத்தில் திருமண இடத்திற்கு வருவார் என்று அவனது பெற்றோர்கள் பெண்ணின் பெற்றோர்களுக்கு உறுதி அளித்தனர்.
ராஜீவ் மேடையை ஆக்கிரமித்தபோது, மணமகள் ரஞ்சனி அமர்க்களமான பாரம்பரிய உடையில் வந்து ராஜீவின் அருகில் அமர்ந்தார். சுமார் 40 பார்வையாளர்கள் மட்டுமே திருமண மணடபத்தில் எழுந்தருள, எளிமையான முறையில் ராஜீவ் ரஞ்சனை திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த உடனேயே, TN06EM9880 என்ற பதிவெண் கொண்ட சிவப்பு நிற பலேனோ காரை சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு ஓட்டி வந்து, ராஜீவின் ஹூண்டாய் காருடன் பந்தயத்தில் ஈடுபட்டது ரஞ்சனி தான் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார் ராஜீவ். ரஞ்சனி அவளது மாமாவுடன் அவரது காரில் பாண்டிச்சேரிக்கு காரை தானே ஓட்டி வந்தார்.
கொரோனா வைரஸுக்கு பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்ட தனது அன்பான தோழிக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை என்பதால் ரஞ்சனி அவளது தோழிக்கு உதவுவதற்காக சென்னையில் அதிக நேரம் தங்கினார். நல்லவேளையாக, ரஞ்சனி தனது நெருங்கிய தோழி ஒருவரைக் கண்டுபிடித்து, வைரஸால் பாதிக்கப்பட்ட தோழிக்கு உதவி செய்யச்சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் பாண்டிச்சேரி புறப்பட்டார். எவரும் பதட்டப்பட வேண்டாம் என்றும், திருமண நாளன்று சரியான நேரத்தில் திருமண இடத்திற்குச் வந்துவிடுவதாகவும் பெற்றோரிடம் தெரிவித்தார். திருமண ஜோடி சரியான நேரத்தில் அந்த இடத்தை அடையும் வரை மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர்கள் உறைந்து போய்விட்டனர்.
பின்னர், ராஜீவ் சுந்தரத்தை தனக்கு கார் வாடகையை குறைத்ததற்காகவும், தனது ரோபோ டிரைவிங்கை பொறுத்துக்கொண்டதற்காகவும் தோளில் தட்டிக்கொடுத்தார். ரஞ்சனி, காரை 100 கிலோமீட்டருக்கு மேலே விரைவுபடுத்தும் போதெல்லாம், பயமில்லாமல் பொறுமை காத்த அவர் மாமாவை அணைத்து நன்றி கூறினார்.
புதுமணத் தம்பதிகள் தாலி கட்டிய சிறிது நேரத்திலேயே, எதிர்காலத்தில், சாலையிலோ அல்லது தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலோ, அவசரமாக வாகனம் ஓட்டுதல் அல்லது ரேஸ் ஓட்டுதல் ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது என்று முடிவு செய்தனர். பின்னர், புதிய காதல் பறவைகள் உட்பட திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரும் தங்கள் வாழ்க்கையின் பெரும் விருந்துகளில் ஒன்றை ரசித்து உண்டு மகிழ்ந்தனர்.
சுவாரஸ்யமாக, இந்த ஜோடி சரியாக ஒரே நேரத்தில் சாப்பிட ஆரம்பித்தது மட்டுமில்லாமல், வண்டி ஒட்டிய மாதிரி வேகம் இல்லாமல், மெதுவாக ரசித்து ருசித்து உண்டனர். இருவரும் ஒரே நேரத்தில் விருந்தை முடித்தனர். இது, பார்த்தவர்கள் முகத்தில், குறிப்பாக சுந்தரத்தின் முகத்தில் தனியொரு மகிழ்ச்சியை கொடுத்தது.