செல்ல மகளுக்கு கற்பனை கவிதை
உன் பிஞ்சு நெஞ்சோடு
என் முகம் புதைத்து
உன் விரலால் தலைகோதி
என்னை தூங்க வைத்து
என் தாயை நினைவூட்டும்
என் மகளே நீ எனக்கு
இன்னொரு தாயடி
உன் தாலாட்டு
எனக்கு தினம் தினம் வேண்டுமடி
உன் பிஞ்சு நெஞ்சோடு
என் முகம் புதைத்து
உன் விரலால் தலைகோதி
என்னை தூங்க வைத்து
என் தாயை நினைவூட்டும்
என் மகளே நீ எனக்கு
இன்னொரு தாயடி
உன் தாலாட்டு
எனக்கு தினம் தினம் வேண்டுமடி