மர்ம தேசம்

மர்ம தேசம்
===========

என்றோ ஓர் நாள்
கவிதை தாகத்தில்
இணையதள பாதைவழி
தேடியபோது எழுத்து தேசத்தில்
கவிதையாறுகள் வெள்ளமாய்...

வானமாய் நீரைக் கவர்வதும்
மீண்டும் மழையாய் பொழிவதுமாய்
கவிதைகள்.. கவிதைகள்...
வற்றாத ஜீவா ஆறுகளாய்...

இரவென்றும் பகலென்றும்
நேரம் காலமில்லை....
மந்திர வார்த்தைகளை சொல்லி
எழுத்து வாசல் திறக்கும்போதெல்லாம்
கவிதை ஆற்றினில்
அள்ளி அள்ளி பருகி
பருகியதற்கு விலையாய்
பண்டமாற்றாய் கவிதைகளே....

இப்போதெல்லாம்
எழுத்துக் கதவுகளை திறக்கையில்
மர்ம தேசமாய் திடுக்கிடல்கள்...
கவிதை... கதை... கட்டுரை
இவற்றையெல்லாம்
விழுங்கி உண்டபடி
விடை தெரியாத விடுகதைகளாய்...

இப்படி இருக்கும்...
அப்படி இருக்கும்...
எப்படியும் இருக்கும்...
கடைசியில் எதுவும் இருக்காது...

சிலது பூதாகரமாய்...
ஆயிரம் தலை வாங்கிய
அபூர்வ சிந்தாமணியைப் போல்...
இருதயம் படபக்கத்தான் செய்கிறது...

அடவு கட்டிக்கொண்டு
அரிதார முகங்கள்...
ஆணும் பெண்ணும் தெரிவதில்லை...
ஆண் பெண்ணாய்... பெண் ஆணாய்...
ஆராய்ந்து பார்க்க நேரமுமில்லை..
சோர்ந்து போவதில் கதவு மூடல்கள்...

ஆராய்ச்சியை நிறுத்தினாலும்
இந்த விரல்கள் மட்டும்
அடங்குவதேயில்லை
மர்மதேசம் மாறி இருக்குமா??
சந்தேகத்தில் திறவு கோலினால்
மீண்டுமாய் திறந்து... திறந்து...

வார்த்தை தூபமிட்டு
சாம்பிராணி பொசுங்கலில்
ஒரு சில வாசனையான சுவாசிப்புகள்
சாம்பிராணியின் அழிப்பினில்
நேசமெனவும்... விசுவாசமெனவும்....
புரியாமலேயே....

ஏன் எதற்கென்று
புரியாத கவிதை தேசம்
மர்மதேசமாய்
கொஞ்சம் நடுங்கத்தான் வைக்கிறது...

நடுக்கத்தில் நலிந்து கொண்டே நான்
விரல் மட்டும் கிறுக்குவதில்
ஓய்வு ஒழிசல் இல்லாமல்....

எழுதியவர் : சொ.சாந்தி. (4-Oct-14, 11:27 pm)
Tanglish : marma dhesam
பார்வை : 173

மேலே