இன்னும் மாறாத ரேகைகள்

அந்த உயரமான
கட்டடத்திற்கு மட்டும் தான்
எப்போதும் முதல் சூரியோதயமா ?

இறைவா பணம் தேவை இல்லை .

ஏழைச் சூரியன்
எப்போது உதிக்கும்
எங்கள் குடிசைகள் புலர்வதற்கும்
ஈர ஆடைகள் உலர்வதற்கும் .

எழுதியவர் : இமாம் (5-Oct-14, 8:29 am)
சேர்த்தது : myimamdeen
பார்வை : 86

மேலே