கொள்கைக்காரன்

நாடுதேசஞ் சுத்திவந்தேம்
காடுஎல்ல போயிவந்தேம்
ஊருதின்னு பாக்காம
ஒருபொண்ணத் தேடிநின்னேம்...

காலத்துக்கு ஒத்துவரா
கருத்தொன்னு வச்சிருந்தேம்
காசுபணந் தேவையில்ல..
காலத்தொணையா நின்னாப் போதும்...

இப்படியா இருந்துதுங்க
எனக்கிருந்த கடப்பாடு
இவனையா நா பெத்தேம்..
அம்மா பாடும் கொறப்பாட்டு...

காதோரக் கிருதாவுல
வெள்ளையாப் பழுத்த முடி
அம்மாகிட்ட சொல்லிருச்சி
இந்தத் தையில் தாலி முடி...

அம்மாவும் எறங்கி வர
அப்பனும் புரிஞ்சிக்கிட்டா...

சாம்பவாழத் தோட்டத்துல
பூத்திருந்த மொதக்கொலையா
சாமந்தியொன்னு வந்துநிக்க
சத்தியமா புடிச்சிருச்சி...

வெத்தலைய மென்ன சனம்
வேணுங்குறத கேக்கச் சொல்ல
பொண்ணு போதும் பொன்னு வேணா
புதுசாப் பாத்த ஒரு தாயி..

ஆஸ்திக்கு கொறச்சலில்ல
அறிவுக்கும் பஞ்சமில்ல
சீருகேக்கா இந்தப்புள்ள
வேருக்குள்ள கொறையிருக்கோ...!?

வெத்தலைய துப்பப்போன
வெள்ளாயி போட்டுவிட
மொத்தமாக ஊருசனம்
சத்தம்போட்டு சொல்லிருச்சி...

"பாத்துகிருவெம் அப்பறமா"

எழுதியவர் : தறுதலையான் (5-Oct-14, 9:51 am)
பார்வை : 110

மேலே