பூக்கள்

மலர்கள் வாழ்வது
ஒரு நாள்
மகிழும் மனங்களோ
பல கோடி
மலரின் வகைகளோ
பல பல
வண்ண நிறங்களோ
கல கல
செடியில் பூத்தது
அழகாக
சரங்களில் தவழ்ந்தது
தொடராக
கூறி விற்பவள்
பூக்காரி
கொண்டையில் சேர்ப்பவள்
அலங்காரி
பூக்கள் பூப்பது
செடியில்
ஒய்யாரம் கொள்வதோ
உயர்வில்
மலர் இல்லாமல்
மணம் இல்லை
மலரை விரும்பாத
மனம் இல்லை