நிலவே என்னை உறங்கவை

விண்ணில் நீ வரும்வரை..,
மண்ணில் உனக்காக நான் காத்திருந்தேன்...
என் கண்ணில் நீர் வரும்வரை..,
எதற்காக? நீ ஒளிந்திருந்தாய்...

என் தனிமையை உறுதிபடுத்த எண்ணி, கண்ணீரும்-
என்னை பிரிந்த போது...
உன் மேக போர்வையை திறந்து,
என் சோக பார்வைக்கு ஒளி ஊட்டினாய்...நன்றி

அன்று உன் முகம் காட்டி, உணவூட்டினாள் என் அன்னை...
இன்று உன்மேல் அவள் முகம் காட்டி, நிலவே என்னை உறங்கவை..

எழுதியவர் : சாய நதி.. (5-Oct-14, 11:44 pm)
பார்வை : 747

மேலே