தோழியே வள்ளி

ஒரு முறை சந்தித்தேன்
பல முறை சிந்திக்க வைத்தாய்
இப்போது பல முறை சிந்திக்கின்றேன்.....
ஒரு முறையாவது
சந்திக்க முடியுமா என்று!!!!

உன் நினைவுகள் வரும்போதெல்லாம்
ஒரு நட்சத்திரத்தை படைக்கச் சொல்லி இறைவனிடம் கேட்பேன்.
இப்போது வானத்தை பார்
புரியும்.....

உன்னை மறக்க நினைக்கும்
ஒவ்வொரு நிமிடமும்
மறந்தே போகிறேன்
உன்னை மறப்பதற்கு.......

தோழியே வள்ளி....
என்னை மன்னித்துவிடு
நான் உன்னை
மறக்க மறந்துவிட்டேன்

........செல்வன்காவேரி........

எழுதியவர் : செல்வன்காவேரி.ப (5-Oct-14, 9:06 pm)
Tanglish : thozhiye vaLLi
பார்வை : 103

மேலே