பள்ளிக் காலம்
(பள்ளியின் கடைசி நாளில் நண்பர்களைப் பிரியும் வேளை எழுதிய கவிதை
அன்றே மேடையில் பாடலாக மாற்றி நண்பர்களிடம் அவர்களின் பிரிவுத் துயரைப் பகிர்ந்து கொண்டேன், என் பள்ளி நண்பர்களோடு பகிர்கிறேன்)
கூவுகின்ற குயிலே எம் கதையைக் கேளம்மா- இது
கூடு பிரியும் குருவிக் கூட்டம் தானம்மா.....
பாடி இந்த மண்ணில் நாங்கள் படித்த காலங்கள்
கூடித்திரிந்து இங்கு நாம் சிரித்த கோலங்கள்...
வேதனைகள் அறியாமல் சுற்றி திரிந்தோம்..
அந்த வேளை இன்று வந்ததுமே கண்ணீர் சொரிந்தோம்...
பாலர் வகுப்பில் படித்த காலம் நினைக்கும் போதிலே
எம்மை வழி நடத்தி வைத்த முகங்கள் மறக்க வில்லையே
பாடும் பறவைக் கூட்டங்கள் நாம் பிரிந்து போகிறோம்- இந்த
பள்ளியில் எங்கள் நினைவை விட்டுப் போகிறோம்...
வேற்றுமைகள் இருந்ததில்லை எம்மிடத்திலே..
எந்த வேளையிலும் சேர்ந்திருப்போம் இவ்விடத்திலே- நாளை
காற்று வந்து கதைகள் சொல்லும் நம்மிடத்திலே- அன்று
கண்கள் சிந்தும் ஒரு துளி நீர் நம் புகைப்படத்திலே.....
ஊர்க் குருவிக் கூட்டங்கள் நாம் பிரிந்து போகிறோம்- எங்கள்
ஊர்களிலே உங்கள் பெயர்தான் உச்சரிக்கிறோம்....
.