விருது பெற்றாள்
![](https://eluthu.com/images/loading.gif)
அரங்கத்தில் அவள்
ஏறி விருது பெற
நடந்தாள்..பலத்த கரவொலி.
சிந்தனை வயப்பட்டு
சிறிய அடிகள் வைத்து
மெல்லிடை ஒடிந்திடாமல்
அவள் மேடையின் நடுவில் சென்றாள்!
அவள் அந்தரங்க ஆசைகளை
பலமுறை அசுத்தப்படுத்திய
பேராண்மை பெருமகனின்
கையினால் இன்று விருது
பெற ..
அவள் மேடையின் நடுவில் சென்றாள்!
கலையுலகின் தலை மகளே வா..
கவிதை நடையில் அழைத்த கயவனின்
கைகளால் விருது பெற அவர்
அருகினில் சென்றவள்..
அழவில்லை ..
அவள் ஆசைக் காதலனை
ஆள் வைத்து அழித்தவனின்
கையை முத்தமிட்டாள் ..
அரங்கம் அதிர்ந்தது..
அவருக்கோ அதிர்வலைகள்
உடல் முழுதும் ..
தமிழ் மகளே..என்று
ஆரத் தழுவ நினைத்து
அப்புறம் என்று கண் சிமிட்டி
மார்பை நிமிர்த்தி நின்றார்..
மறைத்து வைத்த
துப்பாக்கியால் அவரை..
மூன்று முறை சுட்ட பின்பு
முறுவலித்தாள்..
காவலர் முன்னே சென்றாள்!