முரண் முகம்

உன்னை வெளியேற்றிவிட்டு
இன்னொருவரை குடிவைத்துக்கொள்ளும்
வாடகைத்தனம் கொண்டது இல்லை
என் மனம் .......

ஒவ்வொருமுறையும்
நேசத்தின் அஸ்திபாரத்தை
சின்னஞ்சிறு சந்தேக
ஆணிகளால் அசைத்துப்பார்க்கிறாய் ....!!

கொந்தளிக்கும் ஆழ்கடலாய்
கொப்பளிக்கும் எரிமலையாய்
கொட்டிதீர்க்கிறேன்
உன்மீதுள்ள அத்தனையும்
வார்த்தைகளாய் ..!!

இசைபாடிய இதயம்
என்றோ பட்ட காயத்தால்
வசைபாடுகிறது வரிந்துகட்டிக்கொண்டு!

இனியேனும் யோசி
பேசுவதற்கு மட்டுமல்ல
நேசிப்பதற்கும் முன்னும்கூட !
முரண்களை அரண்களாய்
எண்ணிக்கொள்ளும்
அரைகுறை மனிதர்களை
அருகில் வைத்துக்கொள்வதற்கு... !!

கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (6-Oct-14, 5:32 pm)
பார்வை : 87

மேலே